19 January 2026

நிபா வைரஸ் மற்றும் நரம்பியல் நோய்த் தாக்கம்

நிபா வைரஸ் எச்சரிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் (Nipah Virus) தொற்று பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் (Zoonotic) ஒரு வைரஸ் ஆகும். குறிப்பாக வௌவால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமோ அல்லது பன்றிகள் மூலமோ இது பரவுகிறது. இதனைத் தடுக்க, பறவைகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் எனவும், பதப்படுத்தப்படாத சாறுகளை அருந்த வேண்டாம் எனவும் தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

குய்லான்-பார் சிண்ட்ரோம் (GBS)

மத்தியப் பிரதேசத்தில் "குய்லான்-பார் சிண்ட்ரோம்" (Guillain-Barre Syndrome - GBS) என்ற அரிய வகை நரம்பியல் நோய் பரவி வருகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே சொந்த நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு சுய நோயெதிர்ப்பு (Autoimmune) குறைபாடாகும். அசுத்தமான குடிநீர் மற்றும் சமைக்காத இறைச்சி மூலம் இது பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிபா வைரஸ் மற்றும் நரம்பியல் நோய்த் தாக்கம் | TNSMARTPREP