20 January 2026

நிர்வாகச் சீர்திருத்தம் – இந்தியாவின் உடனடி அவசரம்

சீர்திருத்தங்கள் ஏன் முழுப் பயன் அளிக்கவில்லை?

பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் இந்தியாவை மேம்பட்ட நாடுகளுக்கு நிகராக உயர்த்தவில்லை என்பதும், நமது செயல்பாடுகளின் முழுத் திறமை வெளிப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை.

தேசம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் நாடாளுமன்றத்திலோ, மாநில சட்டப்பேரவைகளிலோ போதிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.

திட்டங்கள் அறிவிப்பில் – செயல்பாட்டில் தோல்வி

பல வளர்ச்சித் திட்டங்கள் நிர்வாக இயந்திரத்தின் மெத்தனம் மற்றும் அதிகார வர்க்கத்தின் பொறுப்பின்மை காரணமாக செயல்படாமல் முடங்குகின்றன.

மரபுசாரா எரிசக்தி – அனுமதிகளின் சிக்கல்

புவி வெப்பமயத்தை எதிர்கொள்ள மரபுசாரா எரிசக்திக்கு மாறுவது அவசியம்.

ஆனால் சூரிய மின்சக்தித் திட்டத்திற்கு 116 அனுமதிகள் மற்றும் இசைவுகள் தேவைப்படுகின்றன. இதனால் கால விரயம் மற்றும் பண விரயம் அதிகரிக்கிறது.

நிலக்கரி – இறக்குமதி சார்பு

இந்தியாவில் உற்பத்தியாகும் நிலக்கரி போதாததால் ஆண்டுதோறும் 25 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

புதிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுமதி பெற சுற்றுச்சூழல் அனுமதிக்கு 26 மாதங்கள், வனத் துறை அனுமதிக்கு 34 மாதங்கள் தேவை.

அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னரும் சுரங்கம் செயல்பட குறைந்தது 3 ஆண்டுகள் ஆகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – தாமதம்

ரூ. 9,425 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட 320 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனுமதிகள் பெறாமல் தாமதத்தில் முடங்கி உள்ளன.

வேளாண்மை – உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக கூறினாலும், வேளாண் உற்பத்தித் திறன் சீனாவை ஒப்பிடும்போது மூன்றில் ஒன்றே.

ஏக்கருக்கு சீனா உற்பத்தி செய்வது இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம்.

விவசாயிகள் வருமானம் சந்தை வழியாக அல்ல; மானியங்கள் மூலமாகவே நிலைநிறுத்தப்படுகிறது.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள்

அறுவடைக்குப் பிந்தைய வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் வீணாகும் அளவு:

1.23 கோடி டன் தானியங்கள்
13.7 லட்சம் டன் பருப்பு வகைகள்
73 லட்சம் டன் பழங்கள்
1.2 கோடி டன் காய்கறிகள்
3 கோடி டன் தோட்டப் பயிர்கள்

இந்த இழப்புகள் குறித்து ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் போதிய கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

வேலைவாய்ப்பு நெருக்கடி

மத்திய அரசில் மட்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மாநில அரசுகளில் இதைவிட பல மடங்கு காலியிடங்கள் உள்ளன.

கல்வித் துறை – ஆசிரியர் பற்றாக்குறை

மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 9,82,662 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

சட்டம் – ஒழுங்கு மற்றும் காவல் துறை

இந்தியாவில் 5.92 லட்சம் காவல் துறை பணியிடங்கள் காலியாக உள்ளன.

குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மெத்தனம் கவலைக்கிடமானது.

சுகாதாரத் துறை – கிராமப்புற நெருக்கடி

கிராமப்புற மக்கள் அரசு ஆரம்ப சுகாதார மையங்களையே நம்பி உள்ளனர்.

காலியாக உள்ள பணியிடங்கள்:

9,300 மருத்தவர்கள்
17,500 மகப்பேறு மருத்துவர்கள்
3,200 கதிரியக்க மருத்துவர்கள்
4,900 மருந்தாளர்கள்
7,900 ஆய்வக பணியாளர்கள்
22,500 செவிலியர்கள்