22 January 2026

இந்திரா காந்தி அமைதி விருது 2025

விருது அறிவிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது (Indira Gandhi Peace Prize) மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிராசா மச்சேல் (Graca Machel) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன் ₹1 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

கிராசா மச்சேலின் பங்களிப்பு

இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காகவும் நீண்ட காலமாகப் போராடி வருபவர். ஐ.நா சபையில் ஆயுத மோதல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் மொசாம்பிக் நாட்டின் முதல் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.