1 February 2026

மகளிர் உதவி எண் 181 – விழிப்புணர்வு

நிகழ்வு – சுருக்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக நலத் துறை அலுவலர்கள் மூலம் மகளிர் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், உதவி எண்கள் குறித்து விளக்கப்பட்டது.

குழந்தைத் திருமணம் – முக்கிய தகவல்கள்

குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு முன் திருமணம் செய்தல் ஆகும்:

பெண் – 18 வயதுக்கு கீழ்
ஆண் – 21 வயதுக்கு கீழ்

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006

2006 குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்ப்படி குழந்தைத் திருமணம் நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும்:

2 ஆண்டுகள் சிறை
₹1,00,000 வரை அபராதம்

குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தெரிந்தால் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

Childline – 1098
மகளிர் உதவி எண் – 181

மகளிர் உதவி எண் – 181 (சேவைகள்)

181 எண்ணின் மூலம் கிடைக்கும் 5 முக்கிய சேவைகள்:

மருத்துவ உதவி
காவல் உதவி
சட்ட உதவி
உளவியல் ஆலோசனை
தங்குமிடம்

சட்ட உதவி: ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு இலவச வழக்குரைஞர் சேவை வழங்கப்படுகிறது.

மருத்துவ உதவி: 108 கிடைக்காவிட்டால் 181-ஐ அழைக்கலாம்.

முதியோர் பாதுகாப்பு

முதியோர் பாதுகாப்பு எண் – 14567

பாதுகாப்பு இல்லாத முதியோர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

தேர்வு முக்கியத்துவம் (TNPSC)

சமூக நலத் திட்டங்கள்
பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு
முக்கிய உதவி எண்கள் (1098, 181, 14567)
2006 குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
திருமண வயது – பெண்கள் 18, ஆண்கள் 21