4 February 2026

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் – புதிய சரக்கு கையாளல் சாதனை

1️⃣ அறிமுகம் / நிகழ்வு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் (VOC Port) 2025–26 நிதியாண்டில் ஜனவரி மாதம் மட்டும் 40 லட்சம் டன் சரக்குகளை கையாள்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

👉 இது 2024 மார்ச் மாதத்தில் இருந்த 39.5 லட்சம் டன் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

2️⃣ முக்கிய புள்ளிவிவரங்கள் (Facts – Exam Must)

(i) மொத்த சரக்கு கையாளல்
2025–26 (ஜனவரி வரை): 3.597 கோடி டன்
2024–25 (இதே காலம்): 3.394 கோடி டன்

வளர்ச்சி: 6%

(ii) பெட்டக (Container) சரக்கு
7,16,105 TEUs
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.40% வளர்ச்சி

3️⃣ சரக்கு வகை வாரியான வளர்ச்சி

(முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பீடு)

தொழிலக நிலக்கரி – 12.78%
பாஸ்பேட் கல் – 12.65%
கட்டுமானப் பொருட்கள் – 92.10%
உரம் – 40.12%
உர மூலப்பொருட்கள் – 11.51%
சமையல் எண்ணெய் – 17.52%

👉 இது தொழில் + வேளாண்மை + கட்டுமானத் துறைகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

4️⃣ சாதனைக்கு காரணமான உட்கட்டமைப்பு மேம்பாடுகள்

தொழில்நுட்ப & உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள்:
• உயர்திறன் நகரும் பளு தூக்கிகள் (Mobile Harbour Cranes)
3-ஆவது வடக்கு சரக்கு தளம் – முழுமையாக செயல்பாடு
4-ஆவது உயர்திறன் இழுவைப் படகு (Tug Boat) – புதிதாக சேர்ப்பு
• சரக்கு சேமிப்பு வசதிகள் – விரிவாக்கம்

👉 இதனால்:
சரக்கு கையாளல் வேகம் ↑
Port Efficiency ↑

5️⃣ பொருளாதார முக்கியத்துவம்

(i) தமிழ்நாடு பொருளாதாரம்
• ஏற்றுமதி–இறக்குமதி அதிகரிப்பு
• தொழில் வளர்ச்சி → வேலைவாய்ப்பு உருவாக்கம்

(ii) இந்திய பொருளாதாரம்
• Maritime Trade மேம்பாடு
Logistics Cost குறைப்பு
Ease of Doing Business மேம்பாடு