4 February 2026

மத்திய பட்ஜெட் 2026–27 : “ஸ்திரத்தன்மை & தொடர்ச்சியான வளர்ச்சி” பட்ஜெட்

1️⃣ அறிமுகம் (Introduction)

2026–27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இது கவர்ச்சி பட்ஜெட்டும் அல்ல, கனவு பட்ஜெட்டும் அல்ல, ஆனால் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கவனமான நிதிநிலை அறிக்கை ஆகும்.

👉 சர்வதேச பொருளாதார மந்தநிலை சூழலில் Stability over Populism என்ற அணுகுமுறை தெளிவாக உள்ளது.

2️⃣ மேக்ரோ பொருளாதார அணுகுமுறை (Macro Approach)

சர்வதேச சூழல்:
• உலக பொருளாதாரம் – மந்தகதி
• சர்வதேச வர்த்தகம் – சுறுசுறுப்பு குறைவு
• முதலீட்டு சூழல் – எச்சரிக்கை நிலை

👉 இதனால்:
அதிரடி சீர்திருத்தங்கள் தவிர்ப்பு
வருமான–செலவு கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை

3️⃣ முக்கிய நிதி எண்கள் (Key Budget Numbers)

மொத்த செலவினம்: ₹53.6 லட்சம் கோடி
• திருத்திய மதிப்பீட்டைவிட 7.7% அதிகரிப்பு

Non-debt Receipts: ₹36.5 லட்சம் கோடி
7.2% வளர்ச்சி

4️⃣ நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)

2026–27 : GDP-யின் 4.3%
இலக்கு: 4.5% க்குள் வைத்தல்

வரலாற்று ஒப்பீடு:
2020–21 (Covid): 9.25%
2026–27: 4.3%

👉 Fiscal Prudence தெளிவாக வெளிப்படுகிறது

5️⃣ மூலதனச் செலவினம் (Capital Expenditure)

2025–26 : ₹11.2 லட்சம் கோடி
2026–27 : ₹12.2 லட்சம் கோடி

• ஜிடிபியில் 3.1% ஆக தொடர்கிறது
Growth Oriented Spending

2020–21 : ₹4.26 லட்சம் கோடி → 2025–26 : ₹12.21 லட்சம் கோடி

➡️ Infrastructure-led Growth

6️⃣ கடன் – ஜிடிபி விகிதம் (Debt–GDP Ratio)

2025–26 : 56.1%
2026–27 : 55.5%

👉 கடன் சுமை குறைப்பு = நிலையான நிதி நிர்வாகம்

7️⃣ ஜிடிபி அளவு & வளர்ச்சி

2025–26 ஜிடிபி : ₹3,57,13,886 கோடி
2026–27 (கணிப்பு) : ₹3,93,00,393 கோடி
வளர்ச்சி : ~10%

👉 இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று

8️⃣ வரி கொள்கை அணுகுமுறை (Tax Policy)

என்ன இல்லை?
• அதிரடி வரி குறைப்பு இல்லை
• நுகர்வு ஊக்கச் சலுகைகள் இல்லை

என்ன உள்ளது?
வரி செலுத்துதல் எளிமைப்படுத்தல்
வரி அடிப்படை விரிவாக்கம்
• வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

👉 Revenue Stability > Populism

9️⃣ முக்கிய அறிவிப்புகள்

(i) முதலீடு & தொழில்நுட்பம்
Data Centre நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகள் வரி விலக்கு → FDI ஊக்கம்

(ii) சுகாதாரம்
• 17 புற்றுநோய் மருந்துகள் – சுங்கவரி விலக்கு
• 7 அரிய நோய்கள் – இறக்குமதி மருந்துகளுக்கு விலக்கு

(iii) பசுமை & மின் வாகனங்கள்
Lithium-ion cell உற்பத்தி மூலப்பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு

(iv) மருந்துத் துறை
Bio-Pharma Shakti Mission
5 ஆண்டுகள் – ₹10,000 கோடி
👉 India as “Pharmacy of the World”

(v) வளங்கள் & உட்கட்டமைப்பு
• TN, Kerala, Odisha – அரிய கனிம ஆய்வு மையங்கள்
• 8 அதிவேக ரயில் வழித்தடங்கள்
• 20 புதிய தேசிய நீர்வழித் தடங்கள்

🔟 தேர்வு இணைப்பு (Static + Current Link)

Class 12 Topics:
• Fiscal Policy
• Budget
• Capital Expenditure
• Fiscal Deficit

TNPSC Focus:
• இந்திய பொருளாதாரம்
• அரசு நிதி நிர்வாகம்
வளர்ச்சி + ஸ்திரத்தன்மை சமநிலை