23 February 2026

தமிழ்நாட்டின் சமூகநல, சமூகநீதி மற்றும் வளர்ச்சி நிர்வாகம்

அன்புக்கரங்கள் திட்டம்

பெற்றோரை இழந்த 10,637 குழந்தைகளுக்கு மாதம் ₹2000 கல்வி உதவி வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி தொடர்ச்சியை உறுதி செய்வதே நோக்கம்.

👉 தொடர்புடையவை: Article 21A – கல்வி உரிமை, Article 39(f), SDG 4.
👉 சமூக பாதுகாப்பு மற்றும் மனித மூலதன மேம்பாட்டை உறுதி செய்கிறது.

அன்புச்சோலைத் திட்டம்

28 பகல்நேர பராமரிப்பு மையங்கள் மூலம் மூத்த குடிமக்களின் உடல் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படுகிறது.

👉 தொடர்புடையவை: Article 41 – முதியோர் உதவி, Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.
👉 மனிதநேய நிர்வாகத்தின் எடுத்துக்காட்டு.

தூய்மைப் பணியாளர்கள் உணவுத் திட்டம்

தினசரி 1.30 இலட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.

👉 தொடர்புடையவை: Article 21 – வாழ்வுரிமை, Occupational Safety & Dignity.
👉 சமூக நீதியை வலுப்படுத்தும் நடவடிக்கை.

தாயுமானவர் திட்டம்

27.41 இலட்சம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே ரேஷன் வழங்கும் Door Delivery திட்டம்.

👉 தொடர்புடையவை: PDS Reform, Article 47 – ஊட்டச்சத்து.
👉 நலத்திட்ட விநியோகத்தில் நிர்வாக புதுமை.

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் தொகை உயர்வு

₹2000 உதவித்தொகை2.59 இலட்சம் பயனாளிகள்.

👉 தொடர்புடையவை: RPwD Act 2016, Article 41, 46.
👉 Inclusive Development மற்றும் மனித கண்ணியத்தை உறுதி செய்கிறது.

கலைஞர் கைவினைத் திட்டம்

23,879 கைவினைக் கலைஞர்களுக்கு ₹405 கோடி கடன் மற்றும் ₹83 கோடி மானியம் வழங்கப்பட்டது.

👉 தொடர்புடையவை: MSME வளர்ச்சி, Skill India, Make in India.
👉 பாரம்பரியமும் பொருளாதாரமும் இணையும் வளர்ச்சி முறை.

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்

10,469 வீடுகள் திட்டம் – 6,010 நிறைவு.

👉 தொடர்புடையவை: Refugee Rehabilitation, Article 21 – வாழ்வுரிமை.
👉 மனிதாபிமான நிர்வாகத்தின் வெளிப்பாடு.

தொல்குடி திட்டம்

₹450 கோடி செலவில் 6,685 வீடுகள் மற்றும் 908 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

👉 தொடர்புடையவை: Article 46 – SC/ST Welfare, Tribal Sub Plan.
👉 சமூக சமத்துவத்தின் அடித்தளம்.

அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாடு

₹482 கோடி செலவில் 5,281 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

👉 தொடர்புடையவை: Urban Development, SDG 11 – Sustainable Cities.
👉 மனித வாழ்வின் தரத்தை உயர்த்தும் முயற்சி.

திருநங்கையர் நலன்

மாத ஓய்வூதியம் ₹1500, ஊர்க்காவல் படையில் பணி, “அரண் இல்லம்” பாதுகாப்பு மையம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

👉 தொடர்புடையவை: Transgender Persons Act 2019, NALSA Judgment 2014.
👉 அடையாளமும் கண்ணியமும் உறுதி செய்யும் முன்னேற்றம்.

உயர்கல்வி உதவித்தொகை & சமூகப் பாதுகாப்பு

35.34 இலட்சம் பயனாளிகள் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறுகின்றனர்.

👉 தொடர்புடையவை: Scholarships, Welfare Board Schemes, HDI மேம்பாடு.
👉 மனித மூலதன வளர்ச்சி.

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்

1.83 இலட்சம் குழந்தைகள்78% எடை அதிகரிப்பு ₹40.88 கோடி செலவில் ஊட்டச்சத்து மேம்பாடு.

👉 தொடர்புடையவை: ICDS, Article 47, SDG 2 – Zero Hunger.
👉 ஆரோக்கியமான தலைமுறைக்கான முதலீடு.