16 March 2026

முஸ்லிம் பெண்களுக்கு சம சொத்துரிமை – பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதம்

அறிமுகம் (Introduction)

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமை போன்ற குடும்பச் சட்டங்கள் பல மதங்களுக்கு தனித்தனியான Personal Laws (தனிநபர் சட்டங்கள்) அடிப்படையில் நடைமுறையில் உள்ளன.

முஸ்லிம் பெண்களுக்கு சமமான சொத்துரிமை வழங்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) மீண்டும் விவாதத்திற்குள் வந்துள்ளது.

1. முஸ்லிம் தனிநபர் சட்டம் (Muslim Personal Law – 1937)

Muslim Personal Law (Shariat) Application Act, 1937 படி:

வாரிசுரிமை
திருமணம்
விவாகரத்து
சொத்துரிமை

போன்றவை அனைத்தும் ஷரியத் சட்டம் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த சட்டத்தின் படி:

ஆண்களுக்கு – 2 பங்கு
பெண்களுக்கு – 1 பங்கு

என்று வாரிசுரிமையில் பங்கீடு செய்யப்படுகிறது. இதனால் பாலின சமத்துவம் (Gender Equality) மீறப்படுகிறது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2. முத்தலாக் (Triple Talaq) – பின்னணி

முன்பு முஸ்லிம் சமூகத்தில் “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறை கூறி உடனடியாக விவாகரத்து செய்யும் முறை இருந்தது.

ஆனால்,

2017 – Shayara Bano Case
உச்சநீதிமன்றம் Triple Talaq அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

பின்னர்,

Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019

இந்த சட்டத்தின் மூலம்:

Triple Talaq குற்றமாக அறிவிக்கப்பட்டது
3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும்.

3. உச்சநீதிமன்றத்தின் கருத்து

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:

வாரிசுரிமை என்பது சிவில் உரிமை
அது மதச் சடங்கு அல்ல

எனவே பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக Uniform Civil Code அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

4. பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC)

Uniform Civil Code என்பது:

ஒரு நாட்டில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்கள் (திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு) அமல்படுத்தப்படுவதை குறிக்கிறது.

இதன் முக்கிய நோக்கங்கள்:

பாலின சமத்துவம்
சட்டத்தில் ஒரே நிலை
மத அடிப்படையிலான வேறுபாடுகளை குறைத்தல்

5. அரசியலமைப்பு அடிப்படை

Article 44 – Directive Principles of State Policy

இதில் கூறப்படுவது:

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும்
ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை
உருவாக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

இது Directive Principle ஆக இருப்பதால்:

நேரடியாக நீதிமன்றத்தில் கோரி பெற முடியாது
ஆனால் அரசு சட்டம் கொண்டு வர முடியும்.

6. தொடர்புடைய முக்கிய வழக்குகள்

1985 – Shah Bano Case
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு Maintenance வழங்க வேண்டும் என்று தீர்ப்பு.

1995 – Sarla Mudgal Case
Uniform Civil Code தேவையை நீதிமன்றம் வலியுறுத்தியது.

2003 – John Vallamattom Case
மத அடிப்படையிலான சட்ட வேறுபாடுகள் குறித்து விவாதம்.

2017 – Shayara Bano Case
Triple Talaq செல்லாது

2019 – Jose Paulo Coutinho Case
Uniform Civil Code குறித்து மீண்டும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

7. இந்தியாவில் Personal Laws

இந்தியாவில் மத அடிப்படையில் பல தனிநபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

Hindu Laws (1955–56)
Hindu Marriage Act, 1955
Hindu Succession Act, 1956
Hindu Adoption and Maintenance Act, 1956
Hindu Minority and Guardianship Act, 1956

Christian Laws
Indian Christian Marriage Act, 1872

Muslim Personal Law
Shariat Act, 1937

8. பெண்களின் சொத்துரிமை – மாற்றங்கள்

முன்பு Hindu Succession Act படி பெண்களுக்கு சமமான சொத்துரிமை இல்லை.

ஆனால்,

Hindu Succession (Amendment) Act, 2005 மூலம் மகள்களுக்கும் மகன்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது.

9. UCC – ஆதரவு மற்றும் எதிர்ப்பு

ஆதரவு:

பாலின சமத்துவம்
ஒரே சட்டம்
தேசிய ஒருமை

எதிர்ப்பு:

மத சுதந்திரம் பாதிக்கப்படும்
கலாச்சார வேறுபாடுகள் குறையும்

முடிவு (Conclusion / Way Forward)

சட்ட சமத்துவம் மற்றும் பாலின நீதியை உறுதி செய்ய இந்தியாவில் பொது சிவில் சட்டம் (UCC) குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் மத சுதந்திரத்தையும் சமூக உணர்வுகளையும் மதிக்கும் வகையில் சமநிலை approach அவசியம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்கு சம சொத்துரிமை – பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதம் | TNSMARTPREP