21 March 2026
புதிய வருமான வரிச் சட்டம் 2025 – எளிமைப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை
அறிமுகம் (Introduction)
இந்தியாவில் வரி நிர்வாகம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கும் அரசின் வருவாய் திரட்டலுக்கும் அடிப்படையாகும். 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் காலப்போக்கில் சிக்கலானதாக மாறியதால், அதை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய வருமான வரிச் சட்டம் 2025 கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்ட மாற்றத்தின் அவசியம் (Need for Reform)
பழைய Income Tax Act, 1961:
• அதிகமான பிரிவுகள்
• சிக்கலான சட்ட மொழி
• புரிதல் சிரமம்
இதனால் “Ease of Compliance” குறைந்தது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் (Key Features)
சட்ட எளிமைப்படுத்தல்:
• பிரிவுகள்: 5819 → 536
• அத்தியாயங்கள்: 47 → 23
• வார்த்தைகள்: 5.12 லட்சம் → 2.6 லட்சம்
➤ இது சட்டத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
வரி விகிதங்களில் மாற்றம் இல்லை:
• புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படவில்லை
➤ இது “Tax Stability” மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும்.
புதிய கணக்கீட்டு முறைகள்:
• 39 புதிய வரி கணக்கீட்டு அட்டவணைகள்
• 40 புதிய கணக்கீட்டு விதிமுறைகள்
➤ வரி கணக்கீட்டில் தெளிவு அதிகரிக்கும்.
CBDT (Central Board of Direct Taxes):
➤ வருமான வரி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்பு (Ministry of Finance)
➤ இது “Tax Administration” உடன் தொடர்புடையது.
ஊதியதாரர்களுக்கான HRA சலுகை (HRA Benefit Expansion)
நகர்ப்புற வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், HRA (House Rent Allowance) முக்கிய நிவாரணமாக உள்ளது.
50% வரிவிலக்கு விரிவாக்கம்:
• முன்பு: 4 நகரங்கள் (மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா)
• இப்போது: 8 நகரங்கள் (மேலும்: ஹைதராபாத், புனே, அகமதாபாத், பெங்களூரு)
பிற பகுதிகள்: 40% வரம்பு தொடரும்
புதிய நிபந்தனை:
• வீட்டு உரிமையாளர் – வாடகையாளர் உறவு விவரங்கள் கட்டாயம்
➤ இது “Tax Evasion Prevention” மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
PAN கட்டாய விதிகளில் மாற்றம் (PAN Rule Changes)
PAN (Permanent Account Number) என்பது வரி கண்காணிப்பில் முக்கிய கருவி.
நிகழ்ச்சிகள் (மண்டபம் / ஹோட்டல்):
• பழைய வரம்பு: ₹50,000
• புதிய வரம்பு: ₹1,00,000
➤ சிறிய செலவுகளுக்கு சலுகை
அசையா சொத்து பரிவர்த்தனை:
• பழைய வரம்பு: ₹10 லட்சம்
• புதிய வரம்பு: ₹20 லட்சம்
முக்கியத்துவம்:
• Financial Transparency
• Black Money Control
• Digital Economy வளர்ச்சி
மூலதன ஆதாயம் & வெளிநாட்டு வரிவிதிப்பு (Capital Gains & Foreign Taxation)
மூலதன சந்தை மற்றும் வெளிநாட்டு வருமானங்கள் வரி ஏய்ப்பிற்கு வழிவகுக்கும் முக்கிய துறைகள்.
முக்கிய நடவடிக்கைகள்:
• Capital Gains கண்காணிப்பு கடுமை
• Non-resident taxation நடைமுறைகள் வலுப்படுத்தல்
• 150+ புதிய படிவங்கள் அறிமுகம்
Static Link:
• FEMA (Foreign Exchange Management Act)
• Capital Gains Tax (Short-term / Long-term)
➤ இது வரி அடிப்படை (Tax Base) விரிவாக்கம் மற்றும் கருப்புப் பண கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதவும்.
மொத்த மதிப்பீடு (Overall Analysis)
Positive Aspects:
• Ease of Doing Business
• Ease of Filing Returns
• Transparency & Compliance
Challenges:
• புதிய விதிகளுக்கு மக்கள் தழுவல் சிரமம்
• டிஜிட்டல் அறிவு தேவை
• நடைமுறை அமலாக்க சிக்கல்கள்
முடிவு / எதிர்காலம் (Conclusion / Way Forward)
புதிய வருமான வரிச் சட்டம் 2025 என்பது “எளிமை + வெளிப்படைத்தன்மை + கண்காணிப்பு” என்ற மூன்று அடிப்படைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, வரி செலுத்தும் பண்பாட்டை (Tax Culture) மேம்படுத்தும். ஆனால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் திறமையான நிர்வாகம் மிகவும் முக்கியம்.