24 March 2026

விவசாயக் கடன் தள்ளுபடி – மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் வேளாண் நிதிக் கொள்கை

Introduction

இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய துறையாக உள்ளது. விவசாயிகள் கடன் சுமை ஒரு நீண்டகால சமூக-பொருளாதார பிரச்சினையாகும். இந்த நிலையில், முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிதிக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கொள்கை யை பிரதிபலிக்கிறது.

1. மத்திய அரசின் நிலைப்பாடு

“Farm Loan Waiver” திட்டம் பரிசீலனையில் இல்லை. இதற்கான காரணங்கள்: நிதிசுமை அதிகரிப்பு, நிதிக் கட்டுப்பாடு பாதிப்பு, Moral hazard (கடன் திருப்பிச் செலுத்தும் பழக்கம் குறைவு). இது நிதிக் கொள்கை (Fiscal Policy) யுடன் தொடர்புடையது.

2. மாற்று ஆதரவு திட்டங்கள்

Kisan Credit Card (KCC) மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. குறுகிய கால வேளாண் கடன் மூலம் பிணையின்றி ₹1.6 லட்சம் – ₹2 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. PM-KISAN திட்டம் மூலம் ஆண்டுக்கு ₹6000 நேரடி பணமாற்று (DBT) வழங்கப்படுகிறது. பயிர் காப்பீடு (PMFBY) மூலம் பயிர் இழப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

3. கடன் தள்ளுபடி – நன்மை & குறைபாடுகள்

நன்மைகள்: உடனடி நிவாரணம், விவசாயிகளின் நிதி நெருக்கடி குறைப்பு.

குறைபாடுகள்: நீண்டகால தீர்வு அல்ல, வங்கிகள் மீது அழுத்தம், நிதி பற்றாக்குறை அதிகரிப்பு, உண்மையான பயனாளிகளை அடையாளம் காண சிரமம்.

4. தொடர்புடைய மற்ற அறிவிப்புகள்

ராணுவ ஓய்வூதிய வரிவிலக்கு தொடர்கிறது மற்றும் புதிய வருமான வரி சட்டம் (2025) யிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் SWAMIH Fund மூலம் ₹15,000 கோடி முதலீடு செய்து முடங்கிய வீட்டு திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் வீடுகள் கட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5. பெரிய பொருளாதார கருத்து

“Subsidy vs Investment” என்பது முக்கியமான விவாதமாகும். அரசின் கவனம் நேரடி உதவி (DBT), உற்பத்தி திறன் உயர்த்துதல், நீடித்த வளர்ச்சி (Sustainable agriculture) ஆகியவற்றில் உள்ளது.

Conclusion / Way Forward

விவசாயக் கடன் தள்ளுபடி ஒரு குறுகியகால தீர்வு மட்டுமே. நிலையான தீர்விற்காக வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, சந்தை அணுகல் (MSP, e-NAM), நீர்ப்பாசன மேம்பாடு, தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை அவசியம். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வு மற்றும் “Doubling Farmers’ Income” இலக்கு அடைய முடியும்.