16 April 2026
கல்வி, மனித வளம் & பொருளாதாரம்
அறிமுகம்
கல்வி மனித வாழ்வின் அடிப்படை தூண் ஆகும்.
ஆனால் இன்று அது பட்டம் + வேலை என்ற குறுகிய நோக்கில் பார்க்கப்படுகிறது.
இதனால் மனித வள மேம்பாடு (Human Development) முழுமையடைவதில்லை.
1. மனித மூலதனம் (Human Capital)
Definition: மனிதர்களின் கல்வி, திறன், ஆரோக்கியம் ஆகியவை பொருளாதார வளமாகும்.
12ம் வகுப்பு கருத்து:
கல்வி → திறன் → உற்பத்தி அதிகரிப்பு
இங்கு:
நவீன கல்வி → தொழில்நுட்ப திறன்
பாரம்பரிய அறிவு → வாழ்க்கை திறன்
2. பொருளாதார மேம்பாடு (Economic Development)
Definition: வருமானம் மட்டுமல்லாமல் வாழ்க்கை தரம் உயர்வதே மேம்பாடு.
11ம் வகுப்பு கருத்து:
மனித நலன் முக்கியம்
இங்கு:
கல்வி முழுமையற்றால் → முழுமையற்ற வளர்ச்சி நிலை
3. நிலைத்த வளர்ச்சி (Sustainable Development)
நவீன கல்வி → தொழில்நுட்ப வளர்ச்சி
பாரம்பரிய அறிவு → இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை
இரண்டும் இணைந்தால் தான் நிலைத்த வளர்ச்சி சாத்தியம்.
4. காரணம் → விளைவு (Cause → Effect)
தற்போதைய பிரச்சனை:
கல்வி = வேலை மட்டும்
மனித மதிப்புகள் குறைவு
பாரம்பரிய அறிவு புறக்கணிப்பு
உள்ளூர் அறிவு இழப்பு
அதிக போட்டி மற்றும் தேர்வு முறை → மன அழுத்தம்
விளைவுகள்:
மனித வள குறைபாடு
திறன் உள்ளது ஆனால் வாழ்க்கை திறன் இல்லை
பொருளாதார பாதிப்பு (உற்பத்தி தரம் குறைவு, வேலை திறன் குறைவு)
சமூக பாதிப்பு (உறவுகள் பலவீனம், ஒழுக்கம் குறைவு)
5. உலக எடுத்துக்காட்டுகள்
ஜப்பான் – ஒழுக்கம் மற்றும் பொறுப்பு
பின்லாந்து – மனநலம் மற்றும் அனுபவக் கற்றல்
ஸ்விட்சர்லாந்து – Theory + Practical
நியூஸிலாந்து – பாரம்பரிய அறிவு இணைப்பு
இது Balanced Human Development எனப்படுகிறது.
6. தீர்வுகள் (Solutions)
கல்வி மாற்றம்:
உள்ளூர் அறிவு சேர்த்தல்
அனுபவ அடிப்படையிலான கற்றல்
ஆசிரியர் பங்கு:
திறன் மேம்பாடு
நடைமுறை கற்றல்
அரசு பங்கு:
கல்விக் கொள்கை மாற்றம்
நிதி உதவி
7. முக்கிய பொருளியல் கருத்துகள் (Exam Keywords)
Human Capital
Human Development
Sustainable Development
Skill Development
Knowledge Economy
சுருக்கம் (Summary)
நவீன கல்வி அறிவை வழங்குகிறது
பாரம்பரிய அறிவு வாழ்க்கையை கற்றுத்தருகிறது
இரண்டும் இணைந்தால் தான் முழுமையான மனித வளமும், நிலையான பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும்.