21 April 2026

ஆர். வைஷாலியின் கேண்டிடேட்ஸ் செஸ் வெற்றி – இந்திய மகளிர் செஸ் வரலாற்றில் புதிய மைல் கல்

அறிமுகம்

செஸ் விளையாட்டு இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் விளையாட்டாகும்
சமீப காலங்களில் இந்தியா உலகளவில் செஸ் சக்தியாக உருவெடுத்து வருகிறது

சென்னைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஆர். வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய மகளிர் செஸ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகும்

1. கேண்டிடேட்ஸ் போட்டியின் முக்கியத்துவம்

கேண்டிடேட்ஸ் போட்டி உலக செஸ் சாம்பியனைச் சவால் செய்யும் வீரரைத் தேர்வு செய்யும் உயர்ந்த நிலை போட்டி

1952 முதல் நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சாதனை

வைஷாலி இந்த போட்டியை வென்ற முதல் இந்திய மகளிர் வீராங்கனை என்பது வரலாற்றுச் சிறப்பு

2. வைஷாலியின் சாதனை

வயது: 24
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றி

தொடக்கத்தில் பின்தங்கிய நிலையிலிருந்தும் மன உறுதியால் மீண்டு வெற்றி பெற்றார்

கடைசி சுற்றில் கேத்தரினா லாக்னோவை வீழ்த்தி பட்டம் கைப்பற்றினார்

உலக மகளிர் சாம்பியன் ஜு வென்ஜுனுக்கு எதிராக விளையாட தகுதி பெற்றார்

3. இந்திய செஸ் வளர்ச்சி – பின்னணி

விஸ்வநாதன் ஆனந்த் இந்திய செஸ் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்
(2000, 2007, 2008, 2010, 2012 உலக சாம்பியன்)

சமீப சாதனைகள்:
டி. குகேஷ் – உலக சாம்பியன் (2024)
ஹம்பி – உலக ரேபிட் சாம்பியன்
திவ்யா தேஷ்முக் – உலகக் கோப்பை வெற்றி
2024 செஸ் ஒலிம்பியாட் – இந்தியா (ஆண் & பெண்) தங்கம்

4. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக பரிமாணம்

வைஷாலி போன்ற சாதனைகள் பெண்கள் விளையாட்டு முன்னேற்றத்தை காட்டுகிறது

இந்திய அரசியலமைப்பு:
Article 15 & 16 – சமத்துவம்

பெண்கள் அதிகாரமளித்தல் முக்கியமான தலைப்பு

5. தமிழ்நாடு பங்கு

சென்னை – இந்திய செஸ் தலைநகர்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் (2022)
மாநில அளவில் விளையாட்டு மேம்பாட்டு கொள்கைகள்

தமிழ்நாடு செஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது

முடிவு / எதிர்காலம்

வைஷாலியின் வெற்றி இந்திய மகளிர் செஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது

இது பெண்கள் விளையாட்டில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும்

அரசு மற்றும் தனியார் அமைப்புகள் திறமைகளை அடையாளம் கண்டு ஆதரவு வழங்கினால், இந்தியா உலக செஸ் ஆட்சியை மேலும் வலுப்படுத்தும்