28 April 2026

தொற்றா நோய்கள் உயர்வு & சுகாதாரத் துறையின் மாற்றங்கள் (NSSO 2025 அறிக்கை)

Introduction

இந்தியாவில் சுகாதாரத் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே சமயம், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases - NCDs) அதிகரித்து வருவது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட 2025 கணக்கெடுப்பு இந்த இரு முரண்பாடான போக்குகளையும் வெளிப்படுத்துகிறது.

1. தொற்றுநோய்கள் குறைவு vs தொற்றா நோய்கள் அதிகரிப்பு

சுகாதார வசதிகள், தடுப்பூசி திட்டங்கள் (UIP), முதற்கட்ட கண்டறிதல் ஆகியவற்றின் காரணமாக தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், உயர் ரத்த அழுத்தம் (Hypertension), சர்க்கரை நோய் (Diabetes) போன்ற NCDs அதிகரித்துள்ளன.

இது Epidemiological Transition எனப்படும் மாற்றத்தை குறிக்கிறது.

காரணங்கள்:
வாழ்க்கை முறை மாற்றங்கள் (Sedentary lifestyle)
உணவுப் பழக்க மாற்றம் (Processed food)
மன அழுத்தம்
உடற்பயிற்சி குறைவு

இது WHO NCD Action Plan மற்றும் SDG Goal 3 (Good Health and Well-being) உடன் தொடர்புடையது.

2. மகப்பேறு சுகாதார முன்னேற்றம்

98% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது ஒரு முக்கிய சாதனை.
தாய்மைப் இறப்பு விகிதம் (MMR) குறைந்துள்ளது.

Static Linkages:
Janani Suraksha Yojana (JSY)
Pradhan Mantri Surakshit Matritva Abhiyan (PMSMA)
இந்திய அரசியலமைப்பு – Directive Principles (Article 47): Public Health

இது இந்தியாவின் Human Development Indicators மேம்பாட்டைக் காட்டுகிறது.

3. அரசு vs தனியார் சுகாதார அமைப்பு

கிராமப்புறங்களில் 70% பேர் அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் அதிகம்.

பிரச்சினைகள்:
சேவை தரத்தில் வேறுபாடு
நகர-கிராம இடைவெளி
சுகாதார அணுகல் சமமின்மை

இது Social Justice & Equity in Health என்ற முக்கிய கருத்துடன் இணைகிறது.

4. சுகாதாரக் காப்பீடு – வளர்ச்சி & குறைபாடுகள்

காப்பீடு பெற்றோர் 16.6% → 45.85% ஆக உயர்வு
முக்கிய திட்டங்கள்:
Ayushman Bharat – PMJAY
Chief Minister Health Insurance Scheme (TN)

ஆனால்:
Out-of-pocket expenditure (OOP) இன்னும் அதிகம்
பகுதி காப்பீடு, விதிவிலக்குகள்
தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாடற்ற கட்டணங்கள்

இது Universal Health Coverage (UHC) நோக்கை இன்னும் எட்டவில்லை என்பதை காட்டுகிறது.

5. அரசின் பங்கு vs சந்தை ஆதிக்கம்

மக்கள் காப்பீட்டு சந்தை வழியாக சிகிச்சை பெறும் நிலை அதிகரித்துள்ளது.
இது Privatization of Healthcare என்ற பிரச்சினையை உருவாக்குகிறது.

அரசியல் & நிர்வாக பார்வை:
அரசின் அடிப்படை பொறுப்பு: சுகாதாரம் (Article 21 – Right to Life)
Welfare State கொள்கைக்கு எதிரான போக்கு

Conclusion / Way Forward

இந்தியாவில் சுகாதாரத் துறையில் முன்னேற்றம் இருந்தாலும், தொற்றா நோய்களின் உயர்வு மற்றும் சுகாதாரச் செலவுகளின் சுமை முக்கிய சவால்களாக உள்ளன.

அதனால்:
முதன்மை சுகாதார அமைப்புகளை (Primary Health Centres) வலுப்படுத்துதல்
தடுப்பு சுகாதாரம் (Preventive healthcare) மேம்படுத்துதல்
அரசுச் செலவை அதிகரித்தல் (2.5% of GDP – National Health Policy 2017 இலக்கு)
தனியார் துறையை ஒழுங்குபடுத்துதல்

“ஆரோக்கியமான மனிதவளம் = வலுவான பொருளாதாரம்” என்பதால், அரசு நேரடி சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது தான் நீண்டகால தீர்வு.