Indus Valley Civilization

PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement

இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)

TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 11.8 MB

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) - PYQ Points

முதல் வருகை: சார்லஸ் மேசன் (1826).
முதலில் கண்டறிந்தவர்: அ. கன்னிங்ஹாம்.
இயக்குநர் ஜெனரல்: சர் ஜான் மார்ஷல் (சிந்து நாகரிகம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்).
பரப்பளவு: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மொத்தம் 1.5 மில்லியன் சதுர கி.மீ.

1. முக்கிய நகரங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள்

நகரம் ஆராய்ச்சியாளர் ஆற்றங்கரை / இடம்
ஹரப்பாடி.ஆர். சஹானிராவி ஆறு (பஞ்சாப், பாகிஸ்தான்)
மொகஞ்சதாரோசர். மார்டிமர் வீலர் / ஆர்.டி. பானர்ஜிசிந்து ஆறு (லர்க்கானா, பாகிஸ்தான்)
சான்ஹீதாரோஎன்.ஜி. மஜும்தார்சிந்து
லோத்தல்எஸ்.ஆர். ராவ்போகவா ஆறு (குஜராத்)
காளிபங்கன்--காகர் ஆறு (ராஜஸ்தான்)
தோலவிராJ. P. ஜோஷிகுஜராத் (ராண் ஆப் கட்ச்)
ராகிகார்ஹிஅமரேந்திரநாத்ஹரியானா

2. நகர அமைப்பு மற்றும் கட்டிடக்கலை

  • கட்டிடங்கள்: வீடுகள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. காலிபங்கன் மற்றும் லோதலில் சுடாத செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
  • சிறப்பம்சங்கள்: ஒவ்வொரு தெருவிலும் தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் மிகச்சிறந்த சாக்கடை வசதிகள் இருந்தன.
  • மொகஞ்சதாரோ: "இறந்தவர்களின் மேடு" என்று பொருள். இங்கு பெரிய பொது குளியல் குளம் மற்றும் தானியக் களஞ்சியம் (ஒன்பது மண்ணடுக்குகள்) கண்டறியப்பட்டது.
  • லோத்தல்: இது ஒரு துறைமுக நகரம். குஜராத்தி மொழியில் "இறந்த" என்று பொருள். இங்கு செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் இருந்தது.
  • சான்குதாரோ: கோட்டை (Citadel) இல்லாத ஒரே நகரம்.

3. சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கை

  • தொழில்: முதன்மைத் தொழில் விவசாயம். கோதுமை, பார்லி, பஞ்சு பயிரிடப்பட்டன.
  • வணிகம்: மெசபடோமியா, மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்தது. பருத்தி முக்கிய ஜவுளி உற்பத்தியாக இருந்தது.
  • உலோகங்கள்: செம்பு மற்றும் வெண்கலத்தை அறிந்திருந்தனர். இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை.
  • அளவை முறை: வெண்கலக் கோல் மற்றும் தந்தத்தால் ஆன அளவுகோல் (லோத்தல்) பயன்படுத்தப்பட்டன. மிகக் குறைந்த எடை: 0.875.

4. சமய நம்பிக்கைகள் மற்றும் கலைகள்

  • வழிபாடு: தாய் கடவுள் வழிபாடு முதன்மையாக இருந்தது. அரச மரம் படைப்பு மற்றும் அறிவின் மரமாகக் கருதப்பட்டது.
  • பசுபதி முத்திரை: இதில் யானை, புலி, காண்டாமிருகம், எருமை ஆகிய நான்கு விலங்குகள் உள்ளன.
  • எழுத்து முறை: சித்திர எழுத்து முறை (வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டது). ஐ. மகாதேவன் இதைத் தமிழோடு தொடர்புபடுத்துகிறார்.
  • சிற்பங்கள்: மொகஞ்சதாரோவில் வெண்கல நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்டது.

5. எல்லைகள் மற்றும் குடியிருப்புகள்

வடக்குஷார்டுகை / ஹார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
தெற்குதைமாபாத் (மஹாராஷ்டிரா)
கிழக்குஆலம்கிர்பூர் (உத்தரப் பிரதேசம்)
மேற்குசட்காஜென்டர் (பாகிஸ்தான்-ஈரான் எல்லை)

6. முக்கிய கண்டுபிடிப்புகள் - பொருத்துக

பழைய கற்கால கருவிகள் (1863)ராபர்ட் புருஸ் ஃபூட்
இரும்பின் கண்டுபிடிப்புஆரியர்கள்
வேளாண்மை துவக்கம்புதிய கற்காலம்
தீயின் கண்டுபிடிப்புஇடைக்கற்காலம்
சிந்துவின் தோட்டம்மொகஞ்சதாரோ
வீழ்ச்சி: ஹரப்பா நாகரிகம் பொ.ஆ.மு. 1750-க்குப் பிறகு நிலநடுக்கம், வெள்ளம் அல்லது ஆரியர் வருகை போன்ற காரணங்களால் அழிவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
புத்தகக் குறிப்பு: "The Indo-Sumerian Seals Deciphered" - லாரன்ஸ் வாடல்.
பயன்படுத்தப்பட்ட கல்: கத்திகள் செய்ய ரோரி செர்ட் (Rohri Chert) பயன்படுத்தப்பட்டது.