🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

Science பரிணாமம் – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட பரிணாமம் தொடர்பான முக்கிய Points

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

evolution TNPSC Important Points — பரிணாமம் குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • சார்ல்ஸ் டார்வின் - பரிணாமம்
  • பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன் மொழிந்தவர் லெமார்க் ஆவார்.
  • இயற்கை தேர்வு கோட்பாடு முன்மொழிந்தவர் சார்லஸ் டார்வின் ஆவார்.
  • தற்கால உலகம் என்பது கணிம பரிணாமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கிளாட் பெர்னாடு – உடற்செயலியல்
  • ராபர்ட் கோச் -நவீன நுண்ணுயிரியல்
  • கிரிகர் மெண்டல் - மரபியல்
  • கோவேறு கழுதை, குதிரை மற்றும் கழுதையின் கலப்பினமாகும்.
  • ஜெர்ம் பிளாசம் கோட்பாட்டை முன்மொழிந்தவர் அகஸ்ட் வொய்ஸ்மேன் ஆவார்.
  • சில வேட்டையாடும் உயிரினங்கள், அவற்றின் நிறத்தின் காரணமாகச் சில சாத்தியமான இரையை உண்பதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்ளும். அதே போல மற்ற இனங்கள் உண்பதைத் தவிர்ப்பதற்காக அதே நிறத்தைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளைச் சில உயிரினங்கள் உருவாக்கியுள்ளன. இருப்பினும் அவற்றிடமே சில விரும்பத்தகாத அல்லது நச்சு இரசாயனங்கள் உள்ளன. இந்த நிகழ்வு மிமிக்ரி என்று அழைக்கப்படுகிறது.
  • டார்வின் தன்னுடைய 1835 ஆம் ஆண்டு பயணத்தில் கலபாகஸ் தீவுகளிலுள்ள தாவர மற்றும் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
  • இதயத்தூண்டல் துவக்கமும், நெறிப்படுத்துதலும் நடைபெறும் நிகழ்வின் வரிசை : SA கணு - AV கணு - ஹிஸ்ஸின் தசைக்கற்றை பர்கின்ஜி இழை
  • ஜாவா குரங்கு மனிதனின் புதைபடிவமான பித்திகேன்தோரோபஸ் எரக்டஸ்யை கண்டுபிடித்தவர் டிபாயிஸ் ஆவார்.
  • டார்வின் கூற்றுப்படி இனங்கள் சிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன.
  • பரிணாமவியலில் "பயன் மற்றும் பயனற்ற" கோட்பாட்டினை முன்மொழிந்தவர் லாமார்க் ஆவார்.