17 January 2026
வரலாறு மற்றும் தலைவர்கள்: தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம்
பிறப்பு மற்றும் பின்னணி
1924 – ராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுதந்திரப் போராட்ட பங்களிப்பு
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம் இதில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார்.
ராணுவ சேவை
1945 – இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தேச சேவையில் நேரடியாக பங்களித்தார்.
சமூக சீர்திருத்தப் பணிகள்
1950 – ‘ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்’ தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பெற போராடினார்.
இரட்டை குவளை மற்றும் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம்
1954 – இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமை முறைக்கு எதிராகவும் சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்.
மறைவு
11.09.1957 – சமூக நீதிக்கான போராட்டங்களில் ஈடுபட்ட நிலையிலேயே மறைந்தார்.
நினைவுச்சின்னம்
பரமக்குடி – ரூ.3 கோடி செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.