17 January 2026

நெருக்கடியை உருவாக்கும் காற்று மாசு

காற்று மாசுபாடு – இந்தியாவின் மறைமுக நெருக்கடி

வன்முறை, பயங்கரவாதம், தொற்று நோய்கள், இயற்கைப் பேரழிவுகளைவிட இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது காற்று மாசுபாடே. இருப்பினும், இது அரசு நடவடிக்கைகளில் போதிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை.

தவறான புரிதல்கள்

காற்று மாசுபாடு தில்லிக்கே உரிய பிரச்னை என்றும், அது பருவகாலம் அல்லது பிராந்தியச் சிக்கல் என்றும் தவறான புரிதல் மக்களிடையே நிலவுகிறது.

PM 2.5 – தீவிர உடல்நல பாதிப்பு

2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான நுண்ணிய துகள்கள் (PM 2.5) மாநில, அரசியல், ஊடக எல்லைகளைத் தாண்டி இந்தியர்களின் நுரையீரலில் நீடித்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மாசு நெருக்கடியின் “மறதி சுழற்சி”

இந்தியர்கள் காற்று மாசுபாட்டை நவம்பரில் கோபத்துடனும், மார்சில் அலட்சியத்துடனும், மே மாதத்தில் மறதியுடனும் எதிர்கொள்வதால் இந்தப் பிரச்னை தொடர்கதையாக மாறியுள்ளது.

வாழ்வதற்கான உரிமை – அரசமைப்புச் சட்ட நிலை

வாழ்வதற்கான உரிமை (Article 21) என்பது கண்ணியம், ஆரோக்கியம், சுத்தமான காற்று, நீர் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்று உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

1991 – பிகார் அரசு வழக்கு

1991-ஆம் ஆண்டு பிகார் மாநில அரசு வழக்கில் மாசில்லாத காற்று மற்றும் நீரை அனுபவிக்கும் உரிமை வாழ்வதற்கான உரிமையின் ஓர் அங்கம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

MC Mehta வழக்குகள் – சுத்தமான காற்று

சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தா தாக்கல் செய்த வழக்குகளில், சுத்தமான காற்று என்பது கொள்கை விருப்பம் அல்ல, அரசமைப்புச் சட்ட உரிமை என்று நீதிமன்றங்கள் உறுதி செய்தன.

1996 – வேலூர் குடிமக்கள் நல மன்ற வழக்கு

1996வேலூர் குடிமக்கள் நல மன்ற வழக்கு முன்னெச்சரிக்கை நடைமுறை (Precautionary Principle) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய தீர்ப்பு.

Article 32 & 226 – நீதிமன்ற தலையீடு

அரசுகள் தார்மிகக் கடமைகளில் தவறும் போது, Article 32 மற்றும் Article 226ன் கீழ் நீதிமன்றங்கள் தலையிடும் அதிகாரம் கொண்டுள்ளன.

இந்த அதிகாரத்தின் கீழ் தில்லியின் காற்று தரத்தை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT)

நதிநீர் மாசுபாடு, நிலத்தடி நீர் குறைவு, சட்டவிரோத கட்டுமானம் போன்றவற்றில் உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குகள் தொடர்ந்துள்ளன.

2021 – மும்பை மாநகராட்சி – அங்கிதா சின்ஹா வழக்கு மூலம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உறுதி செய்யப்பட்டது.

சட்ட அமலாக்கம் மட்டும் போதுமா?

சட்டங்கள் மட்டுமே காற்று மாசு நெருக்கடியை முழுமையாக தீர்க்க முடியாது. இதன் பின்னணி தார்மிக மற்றும் மனநிலைச் சிக்கல் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குடிமக்களின் அலட்சியம்

குப்பை எரித்தல், பட்டாசு வெடித்தல், வாகனங்களை தவறாகப் பயன்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல், காடுகளை அழித்தல் போன்றவை மாசுபாட்டின் முக்கிய காரணங்கள்.

Article 51-A – குடிமக்களின் கடமை

Article 51-A சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்திய குடிமக்களின் அடிப்படை கடமை என்று வலியுறுத்துகிறது.

நச்சுக் காற்றும் மாசுபட்ட நீரும் அரசு தோல்வியால் மட்டுமல்ல, குடிமக்களின் அலட்சியம், ஒழுக்கமின்மை ஆகியவற்றாலும் உருவாகின்றன.