17 January 2026

வரலாறு மற்றும் தலைவர்கள்: தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம்

பிறப்பு மற்றும் பின்னணி

1924 – ராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுதந்திரப் போராட்ட பங்களிப்பு

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம் இதில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார்.

ராணுவ சேவை

1945இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தேச சேவையில் நேரடியாக பங்களித்தார்.

சமூக சீர்திருத்தப் பணிகள்

1950‘ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்’ தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பெற போராடினார்.

இரட்டை குவளை மற்றும் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம்

1954இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமை முறைக்கு எதிராகவும் சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்.

மறைவு

11.09.1957சமூக நீதிக்கான போராட்டங்களில் ஈடுபட்ட நிலையிலேயே மறைந்தார்.

நினைவுச்சின்னம்

பரமக்குடிரூ.3 கோடி செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு மற்றும் தலைவர்கள்: தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் | TNSMARTPREP