21 January 2026

அறிவியல் மற்றும் ஆளுமைகள்: டாக்டர் சூசன் ஜேக்கப் சாதனை

சர்வதேச அங்கீகாரம்

சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவ நிபுணர் டாக்டர் சூசன் ஜேக்கப் (Dr. Susan Jacob), சர்வதேச ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ISRS) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை நிபுணரான இவர், கருவிழி மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

அறிவியல் பங்களிப்பு

கூம்புக் கருவிழி (Keratoconus) நோய்க்கான சிகிச்சையில் இவரது பங்களிப்பு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த 10 கண் மருத்துவர்களில் ஒருவராக இவர் பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.