17 February 2026

மாநிலங்களின் கடன் – அளவா? விகிதமா? : தமிழ்நாடு vs உத்தரபிரதேசம்

Introduction

மாநில அரசுகள் அதிக கடன் வாங்குவது குறித்த விவாதம் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. “எந்த மாநிலம் அதிக கடன் வாங்கியுள்ளது?” என்ற அரசியல் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் பொருளாதார ரீதியில் கடனை ‘மொத்தத் தொகை’ அடிப்படையில் அல்ல; ‘மாநில உற்பத்தி (GSDP) ஒப்பீட்டில்’ மதிப்பிடுவது தான் சரியான அணுகுமுறை.

🟡 கடன் ஏன் அவசியம்?

நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு பெரிய அளவு முதலீடு தேவைப்படுகிறது. வரிவிதிப்பு அல்லது கட்டண உயர்வு மூலம் மட்டும் நிதி திரட்டுவது அரசியல் ரீதியாக சாத்தியமில்லை.

உலகின் அனைத்து நாடுகளும் கடன் வாங்குகின்றன. 2026–27ரூ.17.20 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது.

👉 கடன் என்பது நிர்வாக கருவி; தவறு அல்ல.

🟡 மாநிலக் கடன் – தமிழ்நாடு & உத்தரபிரதேசம்

📊 மொத்தக் கடன் (2025–26)
தமிழ்நாடு – ரூ.9.55 லட்சம் கோடி
உத்தரபிரதேசம் – ரூ.8.58 லட்சம் கோடி

மக்கள்தொகை:
தமிழ்நாடு – 8 கோடி
உத்தரபிரதேசம் – 24 கோடி

👉 மொத்தத் தொகை அடிப்படையில் ஒப்பிடுவது தவறான அணுகுமுறை.

🟡 சரியான அளவுகோல் – Debt to GSDP Ratio

RBI புள்ளிவிவரம் (மார்ச் 2025)
தமிழ்நாடு – 30.3%
உத்தரபிரதேசம் – 31.8%

நிதிநிலை அறிக்கை (2025–26)
தமிழ்நாடு – 26.7%
உத்தரபிரதேசம் – 29.4%

👉 விகித அடிப்படையில் பார்த்தால் உத்தரபிரதேசத்தின் கடன் சுமை அதிகம்.

🟡 FRBM சட்டம் – 2003

Fiscal Responsibility and Budget Management Act (FRBM), 2003 மூலம் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.

15வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு 28.7% (GSDP அடிப்படையில்) கடன் வரம்பை பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு இதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான கடன் வரம்பை நிர்ணயிக்கிறது.

👉 அரசியல் விவாதம் அல்ல; நிதி ஒழுங்கு முக்கியம்.

🟡 50 ஆண்டு வட்டியில்லா கடன் – மூலதனச் செலவுக்காக

2020–2150 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இதன் நோக்கம் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்.

நிபந்தனை இல்லாத மற்றும் நிபந்தனையுடன் கூடிய நிதி வழங்கப்படுகிறது:
கட்டட விதி மாற்றம்
நில ஆவண எண்மமயமாக்கல்
நிதி மேலாண்மை சீர்திருத்தம்

👉 Capital Expenditure → Multiplier Effect ஏற்படும்.

🟡 உலகளாவிய கடன் நிலை

சர்வதேச அளவில் அரசு கடன் சுமார் $110.9 டிரில்லியன் (IMF) ஆக உள்ளது. 23 நாடுகள் GDP-ஐ விட அதிக கடன் கொண்டுள்ளன.

அமெரிக்கா – உலக அரசு கடனில் 34.5%
சீனா – உலக நாடுகளுக்கு கடன் வழங்கி செல்வாக்கு
இந்தியா – உலக கடனில் 3%, 7வது இடம்

👉 பொதுவாக 60% GDP வரை கடன் பாதுகாப்பானது (Maastricht Criteria – EU).

🟡 முக்கிய பொருளாதார கருத்து

ஒரு ₹1,00,000 சம்பளம் பெறுபவர் மற்றும் ₹25,000 சம்பளம் பெறுபவர் ஒரே அளவு கடன் வாங்கினால், இருவரின் கடன் சுமை சமமல்ல.

👉 Debt Sustainability என்பது:
கடன் விகிதம்
வட்டி செலுத்தும் திறன்
வளர்ச்சி விகிதம் ஆகியவற்றைப் பொறுத்தது.

🟡 Conclusion / Way Forward

கடன் வாங்குவது தவறு அல்ல; கடனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

✔️ வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தினால் – பொருளாதார வலிமை உயரும்
✔️ வீணான செலவாக இருந்தால் – நிதிச் சுமை அதிகரிக்கும்

மாநிலங்கள் செய்ய வேண்டியது:
வரி ஆதாரத்தை விரிவுபடுத்துதல்
மூலதனச் செலவுக்கு முன்னுரிமை
நிதி ஒழுங்கை கடைபிடித்தல்

“Debt is a tool, not a weakness.”