2 March 2026
காவல் துறையின் சமீபத்திய தவறுகள் – அமைப்புசார் சிக்கல்களின் அறிகுறி
அறிமுகம்
தமிழ்நாடு காவல் துறையைச் சார்ந்த சில சமீபத்திய சம்பவங்கள் — காவலர்களால் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை, காவல் மரணம், கடத்தல் போன்றவை — தனிப்பட்ட குற்றச்செயல்களாக மட்டும் பார்க்க முடியாது. இவை காவல் அமைப்பின் கட்டமைப்பு குறைகளை வெளிப்படுத்துகின்றன. ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) நிலைநிறுத்தப்பட வேண்டிய சூழலில், காவல் துறையே சட்ட மீறலில் ஈடுபடுவது கவலைக்கிடம்.
காவல் துறையின் அடிப்படைப் பணி மற்றும் அரசியலமைப்பு அடிப்படை
காவல் துறையின் முக்கிய பணிகள்:
• சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு
• குற்றத் தடுப்பு
• குற்றப்புலனாய்வு
இவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை – மாநிலப் பட்டியல் (State List – Entry 2: Police) கீழ் வருகின்றன.
ஆனால் காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சில செயல்கள் அடிப்படை உரிமைகள் (Articles 14, 21) மீறலாக மாறுகின்றன.
இந்திய காவல் சட்டம் 1861 – காலனித்துவ மரபின் தாக்கம்
இந்திய காவல் சட்டம், 1861 பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு கொண்டு வரப்பட்டது.
அதன் நோக்கம் குடிமக்களைப் பாதுகாப்பதல்ல; மாறாக பிரிட்டிஷ் ஆட்சியை பாதுகாப்பதே.
1950 இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபின்பும் இந்தச் சட்டம் முழுமையாக மாற்றப்படவில்லை.
இதன் விளைவுகள்:
• அரசியல் தலையீடு
• அதிகார மையப்படுத்தல்
• குடிமக்கள் சேவைக்கு பதிலாக ஆட்சிச் சேவை மனப்பான்மை
காவல் மரணங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்
காவல் மரணங்கள் (Custodial deaths) என்பது நேரடியாக Article 21 – உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரம் மீறலாகும்.
D.K. Basu vs State of West Bengal (1997) வழக்கில் கைது நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்கியது.
சர்வதேச அளவில்:
• Universal Declaration of Human Rights (UDHR, 1948)
• UN Convention Against Torture – இந்தியா கையெழுத்திட்டுள்ளது; ஆனால் சட்டமாக்கவில்லை.
இதனால் Custodial violence க்கு Zero tolerance கொள்கை அவசியம்.
அரசியல் தலையீடு மற்றும் காவல் துறையின் சுயாதீனம்
ஜனநாயகத்தில் காவல் துறை அரசியல் அழுத்தமின்றி செயல்பட வேண்டும். ஆனால் நடைமுறையில்:
• பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தில் அரசியல் தாக்கம்
• எதிர்க்கட்சியினர் மீது தடுப்புக் காவல் சட்டம் பயன்பாடு
• ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு சலுகை
இது Article 14 – சமத்துவம் என்ற அடிப்படை கொள்கையை பாதிக்கிறது.
காவல் சீர்திருத்த முயற்சிகள்
தேசிய காவல் ஆணையம் (1977) காவல் துறையின் குறைகளை ஆய்வு செய்து முக்கிய பரிந்துரைகள் வழங்கியது:
• 1861 காவல் சட்டம் ரத்து
• சுயாதீன புகார் ஆணையங்கள்
• அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து காவல் துறையை விடுவித்தல்
சோலி சோராப்ஜி குழு (2005) பரிந்துரையின்படி Model Police Act 2006 உருவாக்கப்பட்டது.
ஆனால் பல மாநிலங்கள் அதை முழுமையாக ஏற்கவில்லை.
பிரகாஷ் சிங் வழக்கு (1996) – உச்சநீதிமன்ற உத்தரவுகள் (2006)
Prakash Singh PIL வழக்கில் உச்சநீதிமன்றம் காவல் சீர்திருத்தத்திற்கு முக்கிய உத்தரவுகள் வழங்கியது:
• State Security Commission அமைத்தல்
• DGP நியமன வழிகாட்டுதல்
• Police Establishment Board
• Police Complaints Authority
பல மாநிலங்கள் இதை முழுமையாக அமல்படுத்தாதது Rule of Law குறித்து கேள்வி எழுப்புகிறது.
முன்னேற்றப் பாதை (Way Forward)
காவல் துறையில் சீர்திருத்தத்திற்கு:
• Accountability மற்றும் Transparency வலுப்படுத்தல்
• மனித உரிமை பயிற்சி கட்டாயமாக்கல்
• CCTV மற்றும் Body Cameras பயன்பாடு
• சுயாதீன புகார் விசாரணை அமைப்புகள்
• Model Police Act நடைமுறைப்படுத்தல்
முடிவு
ஒரு நாட்டின் ஜனநாயக தரத்தை மதிப்பிட வேண்டுமெனில் அதன் காவல் துறையின் செயல்பாட்டைப் பார்ப்பதே போதுமானது. காலனித்துவ காவல் மனப்பான்மையிலிருந்து, மனித உரிமை மதிக்கும், குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட, அரசியல் தலையீடு அற்ற காவல் அமைப்பாக மாற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.