16 February 2026
2026–27 மத்திய பட்ஜெட் – “வளர்ந்த இந்தியா 2047” நோக்கின் அடுத்த கட்டம்
Introduction
2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், “Viksit Bharat 2047” என்ற நீண்டகால வளர்ச்சி நோக்கின் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது. குறுகியகால பிரபலத்தைக் குறிவைக்கும் செலவுகளை விட, உள்கட்டமைப்பு முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட், நிலையான மற்றும் உயர்தர வளர்ச்சியை நோக்கி இந்தியா நகரும் திசையை வெளிப்படுத்துகிறது.
1. மூலதன செலவினம் – வளர்ச்சியின் இயந்திரம்
மொத்த மூலதன செலவினம் ₹12.2 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வேக்கு ₹3 லட்சம் கோடி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் 500% உயர்வு கண்டுள்ளது. பொருளாதார கோட்பாட்டில் Capital Expenditure (Capex) என்பது Growth Multiplier ஆக கருதப்படுகிறது, ஏனெனில் இது வேலைவாய்ப்பு உருவாக்கம், தனியார் முதலீட்டிற்கு ஊக்கம் (Crowding-in Effect), உற்பத்தித் திறன் உயர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது TNPSC Group I Unit V – Indian Economy (Infrastructure & Development Administration) உடன் தொடர்புடையது.
2. வளர்ச்சி விகிதம் & பொருளாதார நோக்கு
பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 7% என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு தொழிலாளர் முறைப்படுத்தல், கடன் அணுகல் மேம்பாடு, ஒழுங்குமுறை எளிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது Supply-side Reforms மற்றும் Structural Reforms என்ற பொருளாதார அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
3. முக்கிய துறைகள் – எதிர்கால முதலீடுகள்
பட்ஜெட்டில் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய துறைகளாக செமிகண்டக்டர் உற்பத்தி, உயிரி மருந்து உற்பத்தி, மின்னணு பாகங்கள், அரிய கனிமங்கள், ரசாயனத் துறை ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை Make in India மற்றும் Atmanirbhar Bharat கொள்கைகளுடன் இணைந்துள்ளன. மேலும் இது UPSC GS Paper III – Industry, Technology & Infrastructure பகுதிகளுடன் தொடர்புடையது.
4. வர்த்தக ஒப்பந்தங்கள் & உலகளாவிய இணைப்பு
இந்தியா 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து வருகிறது. ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன. மேலும் MSME துறைக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது Global Value Chains (GVC) இல் இந்தியாவின் பங்கை உயர்த்தும் முயற்சியாகும்.
5. தனியார் துறையின் பங்கு
வளர்ச்சியை விரைவுபடுத்த ஆராய்ச்சி & மேம்பாட்டில் (R&D) தனியார் முதலீடு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தரவு மையங்கள் (Data Centres) மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும். மேலும் Public-Private Partnership (PPP) முறை வலுப்படுத்தப்படுவது முக்கிய அம்சமாகும்.
6. பாதுகாப்பு & தேசிய பாதுகாப்பு
பாதுகாப்புத் துறைக்கு ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இது National Security & Economic Growth ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை காட்டுகிறது.
7. விமர்சன பார்வை
அதிக Capex செலவினம் → Fiscal Deficit உயர்வு ஏற்படும் சாத்தியம் உள்ளது. மேலும் சமூகத் துறைகளுக்கு போதிய ஒதுக்கீடு அவசியம் என்ற விமர்சனமும் உள்ளது. எனவே வளர்ச்சி மற்றும் Inclusive Growth ஆகியவற்றின் சமநிலை முக்கியம்.
Conclusion / Way Forward
2026–27 பட்ஜெட், குறுகியகால சலுகைகளை விட நீண்டகால உள்கட்டமைப்பு வளர்ச்சி நோக்கத்தை முன்னிறுத்துகிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய உள்கட்டமைப்பு + மனித மூலதனம், தொழில்நுட்ப புதுமை, தனியார்–அரசு கூட்டாண்மை, நிதிச்சீர்மை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்.